உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

Published On 2023-02-26 14:25 IST   |   Update On 2023-02-26 14:25:00 IST
  • இந்த சாலை வழியாக ஏராளமான மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
  • வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பூதலூர்:

பூதலூரில் இருந்து மாரநேரி செல்லும் ஆனந்த காவேரி வாய்க்கால் கரை சாலையில் மிகப்பெரிய பள்ளம் காணப்படுகிறது.

கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்வதால் சாலையில் உள்ள பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடம்பன்குடி, கச்சமங்கலம்.

மாரநேரி ஆகிய கிராமத்தில் இருந்து தினமும் இந்த சாலை வழியாக ஏராளமான மக்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் வேகமாக வரும் போது சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டு உள்ளன.

உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைப்பு செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல பூதலூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் உள்ள மாதா கோவில் நுழைவு வாயில் அருகில் சாலை சிதிலமடைந்த நிலையில் குழியாக உள்ளது.

இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே பூதலூர்மேம்பால சர்வீஸ் சாலையில் குழியாக உள்ள பகுதியையும் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News