உள்ளூர் செய்திகள்
காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி காயம்
- சேலம் கொண்டலாம்பட்டி கோழிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி இவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.
- அப்போது அருகில் சென்ற மின் கம்பி அவர் மீது உரசி தூக்கி வீசப்பட்டு கருகினார்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி கோழிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 21). இவர் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு பருப்பு மில் தொழிற்சாலை வேலை பார்த்து வருகிறார்.
சக்தி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார். அப்போது அருகில் சென்ற மின் கம்பி அவர் மீது உரசி தூக்கி வீசப்பட்டு கருகினார்.
அவரது சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்டு அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.