உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்கள் திருட்டு-போலீசார் விசாரணை

Published On 2022-08-27 14:22 IST   |   Update On 2022-08-27 14:22:00 IST
  • தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது
  • திட்ட பணி பொருட்களை பார்வையிட்டு சரிபார்த்த போது பல்வேறு இரும்பு பொருட்கள் காணாமல் போய் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்படக் கூடிய இரும்பு பொருட்கள் அப்பகுதியில வைக்கப்பட்டிருந்தது.

திட்ட பணி பொருட்களை பார்வையிட்டு சரிபார்த்த போது பல்வேறு இரும்பு பொருட்கள் காணாமல் போய் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து திட்ட மேலாளர் செல்லப்பன் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் திட்டப்பணி நடைபெறக்கூடிய மில்லர்புரம் சின்னமணி நகருக்குவந்து பார்வையிட்டனர்.திருடப்பட்ட பொருட்கள், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News