டிப்பர் லாரி மோதி 3 பேர் படுகாயம்
- வாகனம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் நகரில் ஏற்கனவே சாலையின் இருபுறமும் அதிக அளவில் கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட் டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஜமுனாமரத்தூர் அணைக் கட்டு தாலுகாவை அடுத்த பெரியஎட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (வயது 32) என்பவர் தனது மகள் கவுதமி (13) மற்றும் சகோதரரின் மகன் பூவரசன் (13) ஆகியோரை தானிப்பாடியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்றார்.
செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து செங்கம் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.