உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியை குடை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1,330 திருக்குறளை எழுதி சாதனை

Published On 2023-10-10 13:28 IST   |   Update On 2023-10-10 13:28:00 IST
  • திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வலியுறுத்தல்
  • 70-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் வி.ஏ.கே.நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி உமாராணி.

தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். உமாராணி ஆரணி அடுத்த எஸ். வி. நகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் தமிழ் மீது அதிகளவு பற்று கொண்டவர். கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருந்த போது கவிதை மற்றும் நூல்கள் எழுதி உள்ளார்.

இதனை தொடர்ந்து திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரி புதிய முயற்சியாக சோயாபீன்ஸ், அகல்விளக்கு கை வளையல், கழுத்தில் அணியும் மணி ரூபாய் நாணயம் மற்றும் குடைகளில் தேசிய கொடி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1,330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.

ஆல் இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்டு மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது நல்லாசிரியர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றுள்ளார். மேலும் சாதனைகளை புரிந்த உமாராணியை பாண்டிச்சேரி கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் நேரில் அழைத்து கவுரவித்து பாராட்டினார்.

இதே போல அரசு பள்ளி மாணவ மாணவிகளை தமிழ் ஆசிரியை உமாராணி புதிய முயற்சி மேற்கொண்டு சாதனை புரிய முயற்சி செய்து வருகின்றார்.

Tags:    

Similar News