உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
- பைக் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருவண்ணாமலை:
சேத்துப்பட்டு ஏனாமங்கலம் அடுத்த கிராமத்தில் வசித்தவர் ரமேஷ் மகன் பாரதி(20). இவர், கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து சேத்துப்பட்டுக்கு 2 தங்கையை வாகனத்தில் அழைத்துக்கொண்டு பைக்கில் சென்றார். கங்கைசூடாமணி கிராமத்தில் சென்றபோது, பைக் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாரதி, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பாரதி உயிரிழந்தார். அவரது தங்கை சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.