உள்ளூர் செய்திகள்

வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

வந்தவாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.75 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம்

Published On 2023-10-16 14:02 IST   |   Update On 2023-10-16 14:02:00 IST
  • அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
  • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

வந்தவாசி:

வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 50 படுக்கைகளுடன் கொண்ட அவசர சிகிச்சை பிரிவும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவும் அமைய உள்ளது.

இந்த நிலையில் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5.75 கோடி செலவில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கூடுதல் கட்டிடத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுகள் அமைய உள்ளது.

ஏற்கனவே ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகிலேயே இந்த புதிய கூடுதல் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார். அப்போது கட்டிட வரைபட பணிகளை விரைந்து முடிக்கும்படி வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது நகரமன்றத் தலைவர் எச்.ஜலால், நகராட்சி ஆணையர் எம்.ராணி, பொறியாளர் சரவணன், தி.மு.க. நகரச் செயலாளர் ஆ.தயாளன், நகர்மன்ற துணைத் தலைவர் க.சீனுவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ம.கிஷோர்குமார், அன்பரசு, ரிஹானா, சையத்அ ப்துல்கரீம், கோ.மகேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News