உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு கலெக்டர் முருகேஷ் விலையில்லா சைக்கிள் வழங்கிய காட்சி.

வருகிற 25-ந் தேதி காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்

Published On 2023-08-17 13:36 IST   |   Update On 2023-08-17 13:36:00 IST
  • 1,554 பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை
  • சைக்கிள் வழங்கும் விழாவில் கலெக்டர் தகவல்

வேங்கிகால்:

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பா.முருகேஷ் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 98.61 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று முதன்மை பள்ளியாக நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி திகழ்கிறது.

மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அதற்கு நமது எண்ணங்கள் மற்றும் குறிக்கோள்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வியுடன், சமூகம் சார்ந்த தகவல்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த மாத இறுதிக்குள் சைக்கிள் வழங்கப்படும்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்ச ரூபாயை ஒதுக்கி நகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அமர்ந்து படிக்க இருக்கைகளை வழங்கியுள்ளார்.

மேலும் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளார்.

வருகிற 25-ந் தேதி முதல் 554 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், தமைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டிவிஎம் நேரு. அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் கோமதி குணசேகரன், அரசு வக்கீல் சீனுவாசன், கவிஞர் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News