உள்ளூர் செய்திகள்
சிறப்பு மனுநீதி நாள் முகாமில் கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- 51 பயனாளிகள் பயணடைந்தனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள திருப்பனங்காடு கிராமத்தில் பில்லாங்கல், வெம்பாக்கம், திருப்பனங்காடு, சேலரி ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். சப் -கலெக்டர் அனாமிகா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ஜே.சி.கே.சீனிவாசன், சங்கர், ஞானவேல், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.