உள்ளூர் செய்திகள்
வந்தவாசி கோட்டையில் டி.ஐ.ஜி ஆய்வு
- வந்தவாசியில் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர்
- போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் பார்வையிட்டனர்
வந்தவாசி:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வந்தவாசிப் போர் 1760-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி நகரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும்.
இந்தப் போரில் ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சுச் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையைத் தோற்கடித்தது.
இந்தியாவில் வந்தவாசியில் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மற்றும் கோட்டை அகழி குதிரை லாயம் மற்றும் போரில் பயன்படுத்திய பீரங்கியை வேலூர் சரக டிஐ.ஜி முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் சூப்பிரண்டு கார்த்திகேயன் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தையும் மற்றும் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் பார்வையிட்டனர்.