உள்ளூர் செய்திகள்
வனக்காப்பாளருக்கு கொலை மிரட்டல்
- வாலிபர் கைது
- முள் மரங்களை வெட்டியதை தட்டிக் கேட்டார்
செய்யாறு:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டையை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 50). இவர் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் வன காப்பாளராக உள்ளார்.
கடந்த 24-ந் தேதி மாலை சுமங்கலி கிராமம் பகுதியில் இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் கந்தன் ( 24 ) என்பவர் முள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட சின்னப்பன் ஏன் மரங்களை வெட்டுகிறாய் என்று கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த கந்தன், சின்னப்பனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தனை நேற்று கைது செய்தனர்.