உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்
- சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சூரியதாங்கல் கிராமத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து மங்களம் மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் அம்பேத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.