உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- பள்ளிக்கு சென்றபோது துணிகரம்
செங்கம்:
செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57). இந்த நிலையில் கூலி தொழிலாளியின் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மகளிடம் கோவிந்தராஜ் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு கோவிந்தராஜை கைது செய்தனர்.