புதுப்பாளையம் கிராம பகுதிகளில் மருத்துவ முகாம்
- கொசு மருந்து அடிக்கப்பட்டது
- ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் மருத்துவ வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொசு பெருக்க த்தால் காய்ச்சல் பரவும் நிலை உள்ளதாக மாலைமலரில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று முன்தினம் காரப்பட்டு மருந்து வட்டத்திற்குட்பட்ட அடிவாரம் வீராணங்கள் நந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடித்து மருத்துவ முகாம் நடைபெற்றது.
நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுப்பாளையம் மருத்துவ வட்ட அலுவலர் அலுவலர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராமப் பகுதி முழுவதும் டெங்கு கொசு பெருக்கத்தை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நந்திமங்கலம் கிராம பகுதியில் டெங்கு, மலேரியா உள்பட காய்ச்சல்கள் பரவலை தடுக்க காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து க்கொண்ட நந்திமங்கலம் கிராம பகுதி பொதுமக்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.