வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- செங்கத்தில் தொடர் விபத்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- போக்குவரத்து பாதிப்பு
செங்கம்:
செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கல்லூரி மாணவி சைக்கிளில் பக்கிரி பாளையம் கூட்ரோடு பகுதியில் நேற்று இரவு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ஆம்னி கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் மாணவியை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் உயர் கோபுரம் மின் விளக்குகள் தெரியாததால் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் பக்கிரிபாளையம் கூட்ரோடு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் திருவண்ணா மலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் பொதும க்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறியதை யடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதும க்கள் கலைந்து சென்றனர்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சாலை மறிய லால் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.