உள்ளூர் செய்திகள்

கோவில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் மாணவர்களை படத்தில் காணலாம்.

கோவில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் பள்ளி மாணவர்கள்

Published On 2023-07-22 08:11 GMT   |   Update On 2023-07-22 08:11 GMT
  • கட்டிடம் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதாக புகார்
  • நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்

ஆரணி:

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் ஊராட்சிக்கு பட்ட ரேணுகாபுரம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.

இதில் 2 ஆசிரியைகளும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 46 மாணவ, மாணவி படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடம் பழுதுடைந்துள்ளதால் கடந்த கோடை காலத்தில் சீரமைக்கு பணி நடைபெற்றது.

ஆனால் தற்போது வரையில் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது . கடந்த ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளி வரும் மாணவர்களை அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர். இதனால் ஆசிரியைகள் பாடம் சரிவர நடத்த முடியாமல் திணறுகின்றனர்.

இது மட்டுமின்றி மதியம் வெயில் நேரத்தில் மாணவ மாணவிகள் சிரமப்ப டுகின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் கல்வி துறை ஆகியோர் உடனடியாக பள்ளி சீரமைப்பு கட்டிடத்தை விரைந்து முடித்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

Tags:    

Similar News