உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் விழா மேடை அமைக்கும் பணி
- அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு
- ஆலோசனைகளை வழங்கினார்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலைக்கு 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை தருகிறார்.
இதையொட்டி அவர் கலந்து கொள்ளும் விழா மேடை அமைக்கும் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி என் அண்ணாதுரை எம்.பி., மு.பெ. கிரி எம். எல். ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் ப. கார்த்தி வேல்மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.