உள்ளூர் செய்திகள்
- மாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்துச் சென்றபோது துணிகரம்
- போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விநாயகன் (வயது 30). மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதையடுத்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த செய்யாறு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சோனியா தலைமையிலான போலீசார் தலைமறைவாக உள்ள விநாயகனை தேடி வருகின்றனர்.