உள்ளூர் செய்திகள்

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் காயம்

Published On 2023-09-12 13:45 IST   |   Update On 2023-09-12 13:45:00 IST
  • பொதுமக்கள் மீட்டனர்
  • பாதூர் வனப் பகுதியில் விட்டனர்

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த பாதூர் வனப்பகுதியில் மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளது.

இந்த நிலையில் வெண்மந்தை கிராமத்துக்குள் நுழைந்து சுமார் 5-க்கும் மேற்பட்ட மான்கள், வயல்வெளியில் சுற்றித்திரிந்தன.

இதனைக் கண்ட நாய்கள் மான்களை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் சில மான்கள் அங்கிருந்து தப்பி ஓடியது. அதில் இரண்டரை வயதுள்ள ஒரு பெண் புள்ளிமான் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டது. நாய்கள் கடித்ததில் மான் காயமடைந்தது.

அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டிவிட்டு காயமடைந்த மானை மீட்டனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரக அலுவலர் ரவிக்குமார், வனவர் காளிதாஸ், வனக் காப்பாளர் அபர்ணா ஆகியோர், அந்த மானுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதூர் வனப் பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

Tags:    

Similar News