உள்ளூர் செய்திகள்
- 8-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி கோட்டை பழைய காலனி யைச் சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் ஹேடன் (வயது 13). வந்தவாசியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் ஹேடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வந்தவாசி -ஆரணி நெடுஞ்சாலையில் எதிரே வந்த பைக் ேஹடன் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஹேடனை அங்கிருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.