உள்ளூர் செய்திகள்

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2023-10-17 12:47 IST   |   Update On 2023-10-17 12:47:00 IST
  • விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது
  • 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு கடந்த 11-ம் தேதி முதல் வருகிறது.

அணைக்கு கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த தண்ணீரின் அளவு, நேற்று குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.

விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 805 கனஅடி நீர்வரத்து உள்ளது. தென் பெண்ணையாற்றில் தொடர்ந்து மூன்று நாட்களாக விநாடிக்கு 850 கனஅடி திறக் கப்பட்ட தண்ணீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்றில் 4-வது நாளாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தால், திருவண்ணாமலை உட்பட 5 மாவட் டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்கிறது.

Tags:    

Similar News