- ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
- பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வி த்துறை சார்பில், கீழ்பென்னா த்தூர் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா கீழ்பெ ன்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 18-ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை நடந்தது. 6-முதல் 12 -ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான ஓவியம், இசை, நடனம், தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சு போட்டி, பரதம், குழு நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதன் நிறை விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைகல்வி) காளிதாஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம், ஒன்றிய குழுத்தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், வேட்டவலம்பேரூராட்சி துணைத்தலைவர் ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி அனைவரும் வரவேற்றார்.
விழாவில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தும் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
விழாவில், திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி, கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவாசீர்வாதம், கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கருணாகரன், அரசு பெண்க ள்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஜமீன் அகரம் பள்ளி தலைமை ஆசிரியர் சி.அ.முருகன் தொகுத்து வழங்கினார். வட்டார வளமைய மேற்பார்வை யாளர் செல்வம் நன்றி கூறினார்.