உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் பார் அமைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
- இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்பட உள்ளது
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் 192 அரசு டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைக்க இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்பட உள்ளது.
இதில் விருப்பம் உள்ளவர்கள் நாளை பிற்பகல் 2 மணிவரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளை மாலை 4.30 மணிக்கு இ- டெண்டரில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.