உள்ளூர் செய்திகள்

வாக்குரிமை விழிப்புணர்வு மேற்கொண்ட கருப்பையா.

அவினாசியில் வாக்குரிமை விழிப்புணர்வு பயணத்திற்கு வரவேற்பு

Published On 2023-05-16 12:01 GMT   |   Update On 2023-05-16 12:01 GMT
  • கடந்த மாதம் 6ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சைக்கிள் நடைப்பயணத்தை தொடங்கினார்.
  • அவினாசி அருகில் வந்த போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அவினாசி :

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதற்காக கடந்த மாதம் 6ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சைக்கிள் நடைப்பயணத்தை தொடங்கினார்.

ஓசூரில் இருந்து கோவை வரையிலும், பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேலூர் வரையும் சைக்கிள் நடை பயணம் செல்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் வந்த போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில்:- வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் ஜனநாயக கடமையாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அதன் மூலம் நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வகையில் இருக்க வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு நபரை தேர்ந்தெடுக்க கூடாது.

மக்கள் நேர்மையாக தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்என்றார். இதையடுத்து அவர் தெக்கலூர் மற்றும் கருமத்தம்பட்டி வழியாக கோவை நோக்கி புறப்பட்டார்.

Tags:    

Similar News