உள்ளூர் செய்திகள்

27,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2022-07-11 14:56 IST   |   Update On 2022-07-11 14:56:00 IST
  • 1,700 இடங்களில் முகாம் நடந்தது
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிரம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சி, 4 நகராட்சி பகுதிகளில் முதல், 2-வது மற்றும் 60 வயதிற்கு மேற் பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி உள்பட விடுபட்டவர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

மேலும், மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையங் கள் என சுமார் 1,700 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 27 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி நடந்த முகாம்களை மருத்துவத்துறையினர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News