உள்ளூர் செய்திகள்
- 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் டோல்கேட் என்ற இடத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டு இருந்த முதியவரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து அந்த முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அவர் 150 கிராமம் எடையுள்ள 10 கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.