உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
ஊத்துக்குளியில் பெண்ணிடம் நகைபறித்த 2பேர் கைது
- ஓட்டலில் கடந்த 14 ந் தேதி 2வாலிபர்கள் உணவு அருந்த சென்றுள்ளனர்.
- சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 14 ந்தேதி 2வாலிபர்கள் உணவு அருந்த சென்றுள்ளனர். அந்த ஓட்டலில் உள்ள ராமாத்தாள் என்பவரிடம் உணவை பார்சல் செய்யுமாறு கூறிய வாலிபர்கள் திடீரென ராமாத்தாள் அணிந்திருந்த 2பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்தநிலையில் நகைபறிப்பில் ஈடுபட்ட தேனி மாவடம் ஆண்டிப்பட்டி தங்கம்மாள்புரத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி குலவநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலு துரை ஆகிய 2பேரையும் ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.