உள்ளூர் செய்திகள்
அவினாசியில் பறிமுதல் வாகனங்கள் ரூ.28 லட்சத்திற்கு ஏலம்
- சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்து ஏலத்தில் கொண்டனர்.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் மாவட்டம் அவினாசி மதுவிலக்கு போலீசார், அவிநாசி சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வாகனங்கள் கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி இளங்கோவன்., மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுகுமாரன் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அவினாசி மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 99 இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என ரூ. 28 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா தெரிவித்தார்.