உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது

Published On 2023-11-15 04:35 GMT   |   Update On 2023-11-15 04:35 GMT
  • முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும்.
  • சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம்.

திருப்பூர்:

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். https://www.tnhorticulture.tn.gov.inஎன்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்தின் மூலமாகவும், வட்டாரதோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விண்ணப்பங்களை பெற்று க்கொள்ளலாம்.

அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர்மேலாண்மை மற்றும் முறையான மண்வளமேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும். மேலும் தகவலுக்குஅனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News