உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

28-ந் தேதி முதல் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

Published On 2023-05-24 10:41 IST   |   Update On 2023-05-24 10:41:00 IST
  • திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3 மணிக்கு சென்று 3.05 மணிக்கு புறப்படும்.
  • நாகர்கோவிலுக்கு 4.50 மணிக்கு சென்று சேரும்.

திருப்பூர் :

கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22668) திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லும் நேரம் வருகிற 28-ந் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்று 3.25 மணிக்கு புறப்பட்டது. இனி 3 மணிக்கு சென்று 3.05 மணிக்கு புறப்படும். வள்ளியூர் ரெயில் நிலையத்துக்கு 4.01 மணிக்கு சென்று 4.02 மணிக்கு புறப்பட்டது. இனி 3.43 மணிக்கு சென்று 3.45 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு 5.05 மணிக்கு சென்று சேர்ந்தது. இனி 4.50 மணிக்கு சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News