உள்ளூர் செய்திகள்
தூய்மைப்பணியாளர்களுக்கு வைப்புத் தொகை வழங்கப்பட்டக் காட்சி.
காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வைப்புத்தொகை
- தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.
- இந்த நிகழ்ச்சியின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்புத்தொகை, ஆயுள் காப்பீடு ஆகிய தொகையை கடந்த சில மாதங்களாக வழங்காமல் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டு, முதற்கட்டமாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் வைப்புத்தொகையிலிருந்து பிடித்தம் செய்து, அதனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.