உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

சந்திரகிரஹணத்தால் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நேரம் மாற்றம்

Published On 2023-10-27 16:42 IST   |   Update On 2023-10-27 16:42:00 IST
  • வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது.
  • 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

திருப்பூர்:

ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவாலயங்களில் அன்னாபிேஷகம் நடத்துவது வழக்கம். குறிப்பாக மாலை 6 மணிக்கு, மூலவருக்கு அபிேஷகம் நடத்தி, அன்னத்தால் லிங்கத்திருமேனிக்கு அலங்காரம் செய்து பக்தர் வழிபடுவர்.

வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது. இந்நிலையில் பவுர்ணமி நாளில், சந்திரகிரஹணம் ஏற்படுவதால் அன்னாபிேஷக நேரம் மாற்றப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வழக்கமாக மாலை நேரம் நடக்கும் அபிேஷக பூஜை, 28ந் தேதி காலை நேரத்திலேயே நடக்கிறது. காலை 10:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

கிரஹணம் ஏற்படுவதால், கோவில்கள் வழக்கம் போல் மதியம் நடை அடைக்கப்பட்டு, அடுத்த நாள் (29-ந் தேதி) காலை 6 மணிக்கு திறந்து சாந்திபூஜைகள் செய்து, வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சாமளாபுரம் தில்லைநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரர் கோவிலில் மாலை 4 மணிக்கு அபிேஷக பூஜை துவங்குகிறது. மாலை 6 மணிக்குள் அன்னாபிேஷக பூஜைகள் நிறைவு செய்யப்படும். இரவு 7 மணிக்கு, கிரஹணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News