உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் குடிசையில் தீ விபத்து
- காங்கயம் அருகே அய்யாசாமி நகா் காலனி பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- கட்டடம் கட்டத் தேவைப்படும் பொருட்களை வைப்பதற்காக தகரத்தால் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.
காங்கயம்:
காங்கயம் அருகே அய்யாசாமி நகா் காலனி பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகே கட்டடம் கட்டத் தேவைப்படும் பொருட்களை வைப்பதற்காக தகரத்தால் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் அந்த கொட்டகையில் திடீரெனெ தீப் பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.