உள்ளூர் செய்திகள்
சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவருக்கு வாழ்நாள் சிறை
- கடந்த ஆண்டு 6,8 மற்றும் 11 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு ள்ளார்.
- அவிநாசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் கணேசன் , தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 6,8 மற்றும் 11 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு ள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி பாலு குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்ட னை வழங்கி தீர்ப்பளித்தார் .
இதனை தொடர்ந்து கணேசன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல ப்பட்டார்.