உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

சாலை தடுப்புகளை அகற்றக்கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2023-03-29 13:33 IST   |   Update On 2023-03-29 13:33:00 IST
  • பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.
  • சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில்புதுரோடு பேருந்துநிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி .என். நகர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.

இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையைகடக்க முடியாமல்அவதி அடைவதாகவும் பெண்கள் முதியவர்களுக்கு கடும் இடையூறுஏற்படும் வகையில்தடுப்புகள் அமைந்துள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளைஅகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர்போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மையதடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News