உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
திருமூர்த்தி நகர் பெருமாள் கோவிலில் மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு
- சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
- அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் வருண ஜெபம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது
உடுமலை
உடுமலை திருமூர்த்திநகர் கிராமத்தில் அழகு திருமலை ராய பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதங்களில் சனிக்கிழமை உடுமலையை சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போன நிலையில், வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தளி தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் வருண ஜெபம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மேலாளர் ரகோத்துமன் தலைமை தாங்கினார்.
இதில் வாரியத்தின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.