உள்ளூர் செய்திகள்

மேலாண்மை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி. 

கணக்கம்பாளையம் ஊராட்சியில் சுகாதார மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-08-21 04:21 GMT   |   Update On 2022-08-21 04:21 GMT
  • கழிவுநீா் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்வது.
  • மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க செய்வது.

திருப்பூர் :

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி பொன்விழா நகர் பகுதியில் தமிழக அரசின் "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் நீர் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.

இதில் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம், துணைத்தலைவா் வீரக்குமாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சொா்ணாம்பாள், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கீதா சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம் கூறியதாவது: -கணக்கம்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுநீா் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்வது, அப்பகுதியில் தொடா்ந்து சுகாதாரத்தை உறுதி செய்வது, மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க செய்வது. மேலும், மக்கும் குப்பைகளை அவா்களது வீடுகளிலேயே சிறு குழி எடுத்து, அதில் மக்க செய்து உரமாக பயன்படுத்த செய்வது என அறிவுறுத்தப்படும் என்றாா்.

இதையடுத்து பொன் விழா நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டு இயக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் திட்ட அலுவலர் ( மகளிர் திட்டம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம் ), ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.), வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.), ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர், மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

Tags:    

Similar News