உள்ளூர் செய்திகள்
ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை படத்தில் காணலாம்.
அவினாசியில் தத்ரூபமாக செதுக்கப்பட்ட சிலைகள்
- 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர்.
- ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவினாசி :
அவினாசி புது பஸ் நிலையம் பின்புறம் திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வரா சிற்பக் கலைக்கூடம் நடத்தி வருபவர் ஸ்தபதி கன்னியப்பன்.
இவரது தலைமையில் சரவணகுமார், ரமேஷ் உள்ளிட்ட சிற்பிகள் கடந்த ஒரு மாதமாக கருங்கற்களால் 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர். இது குறித்து சிற்பி கூறுகையில், "ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.