உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
வெள்ளகோவில் அருகே பள்ளி மாணவி தற்கொலை
- ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்
- பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவகுமார் . இவரது மகள் சத்யா(வயது 17). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சத்யாவின் தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், சத்யா தனியார் பள்ளியில் படிக்க விரும்பாமல் தோழிகளுடன் சேர்ந்து அரசு பள்ளியில் படிக்க விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சத்யா பள்ளிக்குச் செல்லவில்லை.
இதனால் பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சத்யா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.