உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2023-07-09 10:36 IST   |   Update On 2023-07-09 10:36:00 IST
  • அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை விளக்கப்பட்டது.
  • உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்பாடு விளக்கப்பட்டது.

 காங்கயம்:

காங்கயம் வட்டாரத்தில் 2023-ம் ஆண்டு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் குழு கண்டறியப்பட்டு அக்குழுவில் உள்ள 25 விவசாயிகளுக்கு காங்கயம் அருகே காடையூர் பகுதியில் முதல் கட்ட பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியில் அங்ககச் சான்று ஆய்வாளர் ஹேமா கலந்துகொண்டு அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகர் அரசப்பன் கோடை உழவு, உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், அங்கக வேளாண்மையில் இவற்றின் பங்கு ஆகியவை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி பரம்பரகத் க்ரிசி விகாஷ் யோஜனா திட்டம் (பி.கே.வி.வை) பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் ரேவதி பாசன நீர் மாதிரி எடுத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்கள் பற்றி கூறினார். அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தேவராஜ், வசந்த் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News