செய்யாறில் ரூ.2½ கோடி வரி பாக்கி
- உடனடியாக செலுத்த ஆணையாளர் வேண்டுகோள்
- குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை
தூசி:
செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-
திருவத்திபுரம் நகராட்சியில் சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை என மொத்தம் ரூ.2 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரம் நிலுவை பாக்கியாக உள்ளது. நிலுவை பாக்கி அதிகமாக வைத்துள்ள காரணத்தினால் பொது மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினால் வசதியாக இருக்கும். இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் திருவத்திபுரம் நகராட்சி அலுவலர்கள் அனைத்து வார்டுகளில் தீவிர வசூல் பணி யினை மேற்கொள்ள உள்ளனர்.
வரிகளை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைத்து வரிக ளையும் உடனே செலுத்தி நகராட்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு'அதில் கூறப்பட்டுள்ளது.