- 3 பேர் கைது
- கஞ்சா விற்பதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
செய்யாறு:
செய்யாறு டவுன் புது தெருவில் வசித்து வருபவர் உதயகுமார் மகன் சுனில் குமார் வயது 22, இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த கத்தி செல்வம் என்பவர் புது தெருவில் கஞ்சா விற்பனை செய்ததாகவும், அதனை கண்ட சுனில் குமார் செல்வத்திடம் எங்கள் பகுதிக்குள் கஞ்சா விற்பனை செய்ய வரக்கூடாது என்றும், மீறினால் போலீசுக்கு தகவல் தெரிவித்து விடுவதாக கூறினார்.
இதனால் முன் விரோதம் கொண்ட கத்தி செல்வம் அவரது நண்பர்காளன வெம்பாக்கம் அடுத்த பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த பசுபதி (25), ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (25), அழிவிடை தாங்கி கிராமத்தைச் சார்ந்த சௌந்தரராஜன் (24), ஆகிய 4 பேரும் செய்யாறு ஆற்காடு சாலையில் கல்லூரி எதிரே இருசக்கர வாகனத்தில் சுனில் குமார் சென்று கொண்டிருந்த போது 4 பேரும் வழிமடக்கி கஞ்சா விற்பதை தடுக்கும் உன்னை ஒழித்துவி டுகிறோம் என வீச்சருவா ளால் வெட்ட முயன்றனர்.
சுனில் குமார் அங்கிருந்து தப்பி ஓடி வந்து செய்யாறு போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து பசுபதி, யோகேஸ்வரன், சவுந்தரராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.