உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் நடத்திய காட்சி.

ஏரியில் பேரிடர் மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறை ஒத்திகை

Published On 2022-09-02 15:05 IST   |   Update On 2022-09-02 15:05:00 IST
  • கையில் உள்ள பொருட்களை கொண்டு மீட்பது குறித்து விளக்கம்
  • ஏராளமானோர் பங்கேற்பு

ஆரணி:

தற்போது பருவ மழை தொடங்கி விட்டதால் பல இடங்களில் கனமழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

இதில் பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாக்க வேண்டும் என்று செயல் விளக்கம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் செயல் விளக்கம் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சப்-கலெக்டர் தனலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்டிக் காலிடப்பாக்களை கொண்டும் நீர்நிலைப் பகுதியில் தத்தளிப்பவர்களை எப்படி மீட்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார்கள்.

கையில் உள்ள பொருட்களை கொண்டு மீட்பது குறித்தும் செயல் தத்ரூபமாக தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி கோபு, இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் பாபு, தாசில்தார் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News