உள்ளூர் செய்திகள்

வந்தவாசி தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோவிலில் ஆஷாட ஏகாதாசியில் தங்கதேரில் ஸ்ரீ பாண்டுரங்கர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வந்தவாசியில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

Published On 2022-07-11 14:29 IST   |   Update On 2022-07-11 14:29:00 IST
  • ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிஷேகம்
  • ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு நடந்தது

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் மங்கல மேல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் கோலாட்டம் ஆடி கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பாண்டுரங்க தங்கத் தேரில் கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News