- லாரி டயரில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்.
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
ஜமுனாமரத்தூர் தாலுகா மேல்அத்திப்பட்டு கிராமம் வெங்கடேசன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 21). இவர் நேற்று காலை பைக்கில் அவரது நண்பர் நெல்லிமரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (21) என்பவருடன் அத்திப்பட்டு கிராமத்தில் இருந்து ஜமுனாமரத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகில் செல்லும் போது எதிரில் சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்க டயரில் பைக் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் மற்றும் ஏழுமலை ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
சக்திவேல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஏழுமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவலறிந்த ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் காயம் அடைந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.