உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்

Published On 2023-07-07 09:45 GMT   |   Update On 2023-07-07 09:45 GMT
  • இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
  • தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணி யிடங்களுக்கா ன அறிவிப்பு தொகுதி 1 மற்றும் 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

மேலும், இந்த தேர்வுகள் குறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் போன்ற இதர விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட அறிவிப்பை எதிர்நோக்கி இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வழியாக தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

எனவே, இந்த பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசு பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 94990 55904 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News