நெல்லை தோட்டக்கலைத்துறை சார்பில் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.98-க்கு விற்பனை
- தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
- வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது.
நெல்லை:
நெல்லையில் மகராஜநகர், மேலப்பாளையம், கண்டியப்பேரி, என்.ஜி.ஓ. காலனி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது.
இங்கு தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் மகாராஜநகர் உழவர் சந்தையில் 2,800 கிலோவும், மேலப்பாளையத்தில் 1,200 கிலோவும், மீதமுள்ள 3 உழவர் சந்தைகளில் 500 கிலோ தக்காளியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தற்போது வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவ ட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக உழவர் சந்தைகளில், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற தக்காளி பழங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து எடுத்து மகராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் நுகர்வோருக்கு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மாவட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தக்காளியில் மிக முக்கிய உணவு ஆதாரமான லைக்கோபின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்டு உள்ளது. இது இதய நோய் மற்றும் புற்று நோயின் அபாயத்தை குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது.
இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.98-க்கு விற்கப்படுவதாக தோட்டக்கலை துணை இயக்கு நர் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.