உள்ளூர் செய்திகள்

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் 19-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

Published On 2022-06-09 14:54 IST   |   Update On 2022-06-09 14:54:00 IST
  • திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் 19-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
  • கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதை முதன்மை நோக்கமாக கொள்ள வேண்டும்

திருச்சி:

விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அர்ஷியா பேகம் தலைமை வகித்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 138 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது நாராயண பாபு பேசியது :

மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவர்களாக பட்டம் பெறும் அனைவரும் ஏழை, எளிய மக்களுக்கு குறிபபாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதை முதன்மை நோக்கமாக கொள்ள வேண்டும். வருங்காலத்தில் முதுநிலை மருத்துவப் பட்டம் பயின்று மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும் என்றார்.

விழாவில் டாக்டர்கள் எம்.எஸ்.அஷ்ரப், ஜமீர்பாஷா, பார்த்திபன், புருஷோத்தமன், மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News