உள்ளூர் செய்திகள்

வட்டிக்கு பணம் கொடுத்து தொழிலாளிக்கு மிரட்டல்-3 பேர் கைது

Published On 2022-06-23 15:24 IST   |   Update On 2022-06-23 15:24:00 IST
  • திருச்சியில் வட்டிக்கு பணம் கொடுத்து தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
  • சம்பவத்தன்று கோர்ட்டு அருகே வைத்து அப்துல் சமது இருசக்கர வாகனத்தை பிடுங்கி அவரை அடித்து உதைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது

திருச்சி:

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (வயது 31). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருச்சி தாயனூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மல்லிகா மற்றும் பெருமாள் ஆகிய இருவரிடமும் ரூ.60 ஆயிரம் பணத்தை வட்டிக்கு கடனாக வாங்கி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாகியும் அப்துல் சமது பணத்தை திரும்ப செலுத்தாததால் கோபமடைந்த மல்லிகா மற்றும் பெருமாள் அப்துல் சமதுவை நேரடியாக சந்தித்து பணத்தை தரும்படி கேட்டு உள்ளனர்.

பின்னர் ஆத்திரமடைந்த மல்லிகா மற்றும் பெருமாள் அவருடன் சேர்ந்த ஜாகிர் உசேன், ஷானவாஸ் ஆகிய 4 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று கோர்ட்டு அருகே வைத்து அப்துல் சமது இருசக்கர வாகனத்தை பிடுங்கி அவரை அடித்து உதைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்துல் சமது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கந்து வட்டிக்கு பணம் கொடுத்து கூலித் தொழிலாளியை அடித்து உதைத்த மல்லிகா, ஜாகிர் உசேன், ஷானவாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாநகரில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து கூலித் தொழிலாளியை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News