திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு - துணைவேந்தர் செல்வம் வழங்கினார்
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் செல்வம் பரிசு வழங்கினார்
- சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி பல்கலைக்கழக துறைகளில் பயிலும் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
திருச்சி,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மையம் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி பல்கலைக்கழக துறைகளில் பயிலும் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டிக்கு திருச்சி புனித வளனார் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பாலகிருஷ்ணன் நடுவராக கலந்து கொண்டார். சுமார் 80 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பாரதிதாசன் மேலாண்மை பள்ளி மாணவர் அஜிஸ் முதலிடத்தையும், புவியியல் துறை மாணவி நிரஞ்சனா இரண்டாம் இடத்தையும், புவியியல் துறை மாணவர் ஷேக் பயாஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் கணேசன் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மைய ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா செய்திருந்தார்.